“மலையக மகிழ்ச்சி” !?

“மலையக மகிழ்ச்சி” !?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மலையக உறவுகளுக்கு வீட்டு உரிமம் அளிப்பது தொடர்பான அவசரப்பட்டுக் கொண்டாட வேண்டாம்.

இது குறித்த கடிதத்தில் உள்ள சொற்களையும், வாக்கியங்களையும் அவதானமாக வாசித்துப் புரிந்துணர்வது அவசியம்.

இன்று ஜனாதிபதி அநுர தலைமையில் பண்டாரவளையில் வழங்கப்பட்ட காணி ‘உறுதிப் பத்திரங்கள்’ என்ற பெயரிலான கடிதங்கள் பற்றி சட்டத்தரணி, நண்பர் ஐங்கரன் குகதாசன் எழுதிய விளக்கப் பதிவு

மலையக உறவுகளுக்கு வீட்டு உரிமம் அளிப்பது தொடர்பான அவசரப்பட்டுக் கொண்டாட வேண்டாம்.

இது குறித்த கடிதத்தில் உள்ள சொற்களையும், வாக்கியங்களையும் அவதானமாக வாசித்துப் புரிந்துணர்வது அவசியம்.

– இவர்களுக்கு காணி ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பான விடயங்கள் எதுவும் இவ் ஆவணத்தில் இல்லை. இது பற்றி அரசாங்கமும் வேறு எவ்வித அறிவித்தலையும் மேற்கொள்ளவில்லை.

– ஒருவர் இந்திய வீட்டுத் திட்டத்தின், முன்நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் (முன்நிபந்தனைகள் எவை என்பது பற்றிய விபரங்கள் இல்லை) கீழ் 10 பேர்ச் (1 பரப்பு) காணியில் வீடு ஒன்றினைப் பெறுவதற்கு சாத்தியமான பயனாளியாக (potential beneficiary) தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதனை அறிவிக்கின்ற கடிதமாகவே இது அமைகிறது.

– உங்களுக்கான நிலம் ஒதுக்கப்பட்டவுடன் (allotted), குறித்த வீட்டினைக் கட்டுவதற்கான, நிலத்தினைப் பேணுவதற்கான உடலுழைப்பினை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– ‘நிபந்தனைகளை சரிவர நிறைவேற்றுவதன் மூலம், செயல்திட்டத்தின் நோக்கத்தினை பூர்த்தி செய்வதன் மூலமும் எதிர்காலத்தில் குறித்த வீட்டின் உரிமையைப் (ownership) பெறுவதற்கு நீங்கள் தகுதியுடையவராவீர்கள்,’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

– இங்கு ‘ஒதுக்கப்பட்ட காணி,’ என்ற சொற்பதமே பாவிக்கப்ட்டுள்ளது. காணியின் உரித்து தொடர்பான எவ்வித விபரமும் இக் கடிதத்தில் இல்லை.
– காணி அமைச்சின் வகிபாகம் தொடர்பில் எவ்வித விபரமும் இல்லை. காணிகளை மக்களுக்கு வழங்குவதில் காணி அமைச்சு கட்டாயமாக உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். இதுபற்றிய தெளிவுபடுத்தல் அவசியம்.

– குறித்த சாத்தியமான பயனாளிகளுக்கு காணிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளனவா? குறைந்தபட்சமாக அடையாளம் காணப்பட்டுள்ளனவா போன்ற விபரங்கள் கூட பொதுவெளியில் இல்லை.
– இதுபற்றி விபரமறிந்த நண்பர் ஒருவர் தெரிவித்ததன்படி, இன்னும் காணி துண்டு அடையாளப்படுத்தவோ, கம்பெனி குத்தகையிலிருந்து பிரித்து எடுக்கப்படவோ, LRC/JETB (Janatha Estates Development Board) அனுமதி பெற்று உறுதி தயாரிக்கப்படவோ இல்லை.

– அவர் மேலும் தெரிவித்ததாவது, காணித் துண்டு ஒன்றினை ஒதுக்கி உறுதி கொடுப்பது பகுதியளவான தீர்வு மட்டுமே. தோட்டத்தில் தொழிலாளர், தொழில் அற்றோர் குடும்பங்களுக்கு காணி உறுதி வழங்கி வதிவிடங்களை கிராமங்களாக மாற்றினால் தான் ஒரு காத்திரமான தீர்வாக அமையும். வீடு கட்டிக் கொடுப்போருக்கு மட்டுமே காணி வழங்கப்படும் என்பது அரை குறையான தீர்வாகவே அமையும்.

COMMENTS

Wordpress (0)