நாலகவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல் (Update)

நாலகவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல் (Update)

பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி நாலக்க கொடஹேவா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

தனது பதவிக் காலத்தில் இளைஞர்களுக்கான நாளைய அமைப்புக்கு 50 இலட்சம் ரூபா நிதி வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கான அவர் கடந்த 7ம் திகதி பொலிஸ் நிதி குற்றவிசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார். 

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இவரை 14ம் திகதி வரை (இன்று) விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் கைதான மேலும் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

இந்தநிலையில் இவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

(1 ம்  இணைப்பு)

நாலகவிற்கு உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்ட பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா, உட்பட மூவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர்கள், பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் கடந்த 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பிலேயே கைதுசெய்யப்பட்டு இன்று திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே அவர்களது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.