சனியன்று வரவு செலவுத் திருத்தங்கள் அறிவிக்கப்படும் – அவைத் தலைவர்

சனியன்று வரவு செலவுத் திருத்தங்கள் அறிவிக்கப்படும் – அவைத் தலைவர்

வரவு செலவுத் திட்ட யோசனைகள் குறித்த திருத்தங்களை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றில் அறிவிக்க உள்ளார்.

2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளில் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நிதி அமைச்சர் எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்க உள்ளார் என அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல இன்றைய தினம் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இறுதி வரவு செலவுத்திட்ட யோசனையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நிதி அமைச்சர் அறிவிப்பார் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். வரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். 

ரோம் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் சில திருத்தங்களை அறிவிக்க உள்ளார்.