நாலக மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

நாலக மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

இந்தக் குறித்த குற்றச்சாட்டு ஏனைய இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனையின் சுமார் 5 மில்லியன் ரூபாய்களை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தாருன்யட ஹெட்ட (tharunyata heta) என்ற அமைப்புக்கு வழங்கியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குறித்த பணப்பரிமாற்றமானது 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-18 திகதிகளுக்கு இடையிலான நாட்களில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் கொடஹேவா கடந்த 7ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதற்கு முன்னர் இந்த பரிமாற்றம் தொடர்பில் பரிவர்த்தனையின் முன்னாள் உதவிப்பணிப்பாளர் தம்மிக்க பெரேரா உட்பட்ட இருவர் டிசம்பர் 4ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.