1000 ஷியா முஸ்லிம்களை கொன்று குவித்த ராணுவம்

1000 ஷியா முஸ்லிம்களை கொன்று குவித்த ராணுவம்

நைஜீரியா நாட்டில் ஷியா முஸ்லிம்கள் மைனாரிட்டி மக்களாக உள்ளனர். இந்நாட்டில் போகோஹராம் என்ற தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர்.

அவர்கள் சன்னி முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

இந்நிலையில் ஷியா முஸ்லிம்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே சாரியா என்ற பகுதியில் திடீர் மோதல் ஏற்பட்டது. அப்போது ராணுவத்தினர் ஷியா முஸ்லிம்களை கண் மூடித்தனமாக கொன்று குவித்தனர். கடந்த ஒரு வாரமாக இந்த சம்பவம் தொடர்ந்து நீடித்தது.

இதில் 1000 ஷியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தற்போது தகவவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதை நைஜீரியா அரசு மறுத்துள்ளது. மொத்தம் 7 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக அரசு கூறுகிறது.

இது தொடர்பாக ஷியா முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறும்போது, ஒரே இடத்தில் மட்டுமே 830 ஷியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இது மட்டுமலல்லாமல் பல்வேறு இடங்களிலும் கொலை நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்து இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்று கூறினார்கள்.