பரக் ஒபாமாவிற்கு கம்மன்பில கோரிக்கை

பரக் ஒபாமாவிற்கு கம்மன்பில கோரிக்கை

இலங்கையின் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவை, ஐக்கிய அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளராக நியமிக்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம், பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கோரிக்கை விடுத்தார்.

இதன் மூலம், நேர்மாறான நடைமுறையால், இலங்கை ரூபாயை நிலைப்படுத்த முடியுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சிக்கெதிராக, இலங்கை அரசாங்கம் போராடி வருகின்ற போதிலும், அதற்கான தீர்வு, நீண்ட தூரத்திலல்லாமல், அரசாங்கத்துக்குள்ளேயே இருப்பதாக, அவர் குறிப்பிட்டார்.

‘மிதக்கும் நாணயப் பெறுமதிக் கொள்கை காரணமாக, ஜனவரியிலிருந்து, இலங்கை ரூபாயின் பெறுமதி குறைவடையவுள்ளது. இதை, அமைச்சர் ரவி கருணாநாயக்க தீர்ப்பதற்கு, நேர்மாறான தீர்வொன்று என்னிடமுண்டு.

ஐக்கிய அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளராக அவரால் வரமுடியுமெனில், ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதியை, இலங்கை ரூபாயின் மட்டத்துக்கு அவரால் கொண்டுவர முடியும்’ என அவர் தெரிவித்தார்.

இந்த விடயத்தை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் கலந்துரையாடுமாறு அவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.