அவசரமாக தரையிறக்கத்தில் ஏர் கனடா விமானம் – 20 பயணிகள் காயம்

அவசரமாக தரையிறக்கத்தில் ஏர் கனடா விமானம் – 20 பயணிகள் காயம்

சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து கனடாவின் டொரண்டோ நகரிற்கு 332 பயணிகள் மற்றும் 19 விமானக்குழுவினருடன் புறப்பட்ட ஏர் கனடா விமான நிறுவனத்தின் AC088 என்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலையால் காற்றுடன் கடுமையாக போராடிய இந்தக் குறித்த விமானம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் தடுமாற்றத்துடனே வானில் பயணித்தது. இதனால் விமானத்தினுள் ஏற்பட்ட பயங்கர நடுக்கத்தின் காரணமாக விமானத்தின் இருக்கைகள் ஆட்டம் கண்டது. இதனால் விமானத்தில் பயணித்த சுமார் 20 பயணிகள் காயமடைந்தனர்.

கனடாவின் கல்கரி நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.