காலி கராப்பிட்டிய வைத்திசாலையின் புற்றுநோய் சிகிச்சைகள் முழுதாக ஸ்தம்பிதமடைதுள்ளது

காலி கராப்பிட்டிய வைத்திசாலையின் புற்றுநோய் சிகிச்சைகள் முழுதாக ஸ்தம்பிதமடைதுள்ளது

காலி கராப்பிட்டிய போதனா வைத்திசாலையின் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சைக்கான இயந்திரம் பழுதானமையே இதற்கான காரணம் என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த இயந்திரத்தை பழுதுபார்ப்பதற்காக வெளிநாடொன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கதிர் வீச்சு இயந்திர பாகங்களுக்கான கால அளவுகள் முடிவடைந்திருப்பதாகவும் அதை புதுப்பிப்பதற்காகவே வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவற்றை சரி செய்வதற்கு குறைந்த பட்சம் 3 மாதங்கள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளதோடு நான்கு வருடத்திற்கோ அல்லது ஏழு வருடத்திற்கு ஒரு தடவையே இந்த இயந்திரம் பழுதுபார்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இவற்றை பழுதுபார்ப்பதற்கான செலவுகள் 15 மில்லியனுக்கு அதிகம் எனவும் தெரிவித்தார். அத்துடன் புற்றுநோய் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மஹரகம மற்றும் பதுளையில் உள்ள புற்றுநோய் வைத்திசாலைகளுக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.