ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை ரத்துச்செய்த சவூதி அரேபியா

ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை ரத்துச்செய்த சவூதி அரேபியா

ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை சவூதி அரேபியா முறித்துக் கொண்டுள்ளது. கடந்த சனிக்கிழமை, ஷியா இன மதகுருவான ஷேக் நிம்ர்-அல்-நிம்ர் உட்பட 47 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் மோசமடைந்தன. பயங்கரவாதக் குற்றச்சாட்டில் அவர்கள் குற்றவாளிகள் எனக் கூறி இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஈரானுடனான இராஜதந்திர உறவுகள் முறித்துக் கொள்ளப்பட்டதை சவூதியின் வெளியுறவு அமைச்சர் அடேல்-அல்-ஜுபைர் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து சவூதியிலுள்ள அனைத்து ஈரானிய தூதரக அதிகாரிகள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது..