மடகஸ்காரில் பிரபல முஸ்லிம் வர்த்தகர் படுகொலை

மடகஸ்காரில் பிரபல முஸ்லிம் வர்த்தகர் படுகொலை

காலி – சோலையை சேர்ந்த பிரபல மாணிக்கக்கல் வர்த்தகரும் Arabesque Private Limited இனது பணிப்பாளருமான அப்துல் புஹாரி நயீம் ஹாஜி (56) மடகஸ்கார் நாட்டுக்கு வியாபார விடயமாக சென்றபோது அங்கு வைத்து படுகொலை செய்யபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனது.

மடகஸ்கார் நாட்டுக்கு வியாபார விடயமாக சென்ற குறித்த வர்த்தகரிடம் வியாபார நடவடிக்கைகளுக்கு தேவையான பணம், பெறுமதியான பொருள் கையில் இருந்ததாகவும் இவர் தங்கி இருந்த அறையில் வைத்து கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் இலங்கையர்கள் (பெரும்பான்மை இன) இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு உள்ளதாகவும், ஜனாஸா நேற்று திங்கட்கிழமை அங்கு அடக்கம் செய்யபட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

galle-jem-bussiness-man-meder