பதான் கோட் தாக்குதலில் இந்தியா ஓவர் ரியாக்ட் பண்ணுகிறது – பாகிஸ்தான்

பதான் கோட் தாக்குதலில் இந்தியா ஓவர் ரியாக்ட் பண்ணுகிறது – பாகிஸ்தான்

முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் பதான் கோட் தாக்குதலில் இந்தியா ஓவர் ரியாக்ட் பன்னுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை இந்தியா பெரிதுபடுத்துகிறது.

இரு நாடுகளிலும் தீவிரவாதிகளும் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இந்தியா தீவிரவாதம் காரணமாக இஸ்லாமாபாத்திற்கு அழுத்தமான சூழ்நிலையை உருவாக்குகிறது என குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தான் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த முஷாரப் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் தீவிரவாதம் பதான் கோட் தாக்குதல் போன்ற சம்பவங்களால் அதிகமாக உள்ளது.

தீவிரவாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டிலும் பொதுவாக இருப்பது தான். நாங்களும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தான், அதனால் பதான்கோட் தாக்குதல் சம்பவத்தை பெரிதுபடுத்தக் கூடாது. இது மாதிரியான சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் ஆனால் இந்த சம்பவங்களிலிருந்து மீண்டு எழுச்சி பெற வேண்டும்.

பாகிஸ்தானின் ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கும் இந்தியா தந்து எதிர்வினையை காட்டுகிறது ஆனால் இந்தியா ஒன்றும் முழுமையாக தீவிரவாதம் இல்லாத நாடு இல்லை என பர்வேஸ் முஷாரப் கூறினார்.

தீவிரவாதம் வரும் போது எல்லாம் இந்தியா சும்மா பாகிஸ்தான் மீது அழுத்தங்களை உருவாக்க முடியாது. நாங்கள் சிறிய நாடாக இருக்கலாம் ஆனால் நாங்கள் எங்கள் நாட்டுக்கு நேர்மையாக இருக்கிறோம்.

இந்தியாவில் தீவிரவாதம் தலைவிரித்தாடும் எல்லைப்பகுதிகள் நிறைய உள்ளன. ஆனால் இந்தியா தீவிரவாதத்தை ஒருதலையான பார்வையிலே பார்ப்பது என்னை எரிச்சலடைய வைக்கிறது. அங்கு ஏதாவது நடந்தால் இந்தியா எங்களை தாக்க முடியாது.

மேலும் கூறிய முஷாரப் இந்தியாவில் நரேந்திர மோடி பிரதமராக வந்த பிறகு முஸ்லிம் சமூகத்தினரிடம் ஒரு வகையான திருப்தியின்மை இருக்கிறது என அவர் தனது பேட்டியில் கூறினார்.