சூதாட்ட விவகாரத்தில் சிக்கிய மேத்யூஸ் , ஹேரத் மற்றும் குசல் பெரேரா

சூதாட்ட விவகாரத்தில் சிக்கிய மேத்யூஸ் , ஹேரத் மற்றும் குசல் பெரேரா

இலங்கை அணியின் தலைவர் மேத்யூசை நிதி மோசடி பிரிவில் விசாரணைக்காக ஆஜராகும் படி பொலிசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

காலியில் கடந்த ஒக்டோபர் மாதம் 14ம் திகதி முதல் 17ம் திகதி வரை இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியின் போது போட்டியின் முடிவை மாற்றியமைப்பதற்காக இலங்கை கிரிக்கெட்டின் இரு ஊழியர்கள், ரங்கண ஹேரத் மற்றும் குஷால் ஜனித் பெரேரா ஆகிய வீரர்களை அணுகியுள்ளனர்.

ஆனால் சூதாட்ட தரகர்களின் வாய்ப்பை மறுத்த இரு வீரர்களும் உடனடியாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் எதிர்ப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் பொலிசாரால் அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் ரங்கண ஹேரத் மற்றும் குஷால் ஜனித் பெரேரா ஆகியோரிடமும் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளது.

எனினும், இலங்கை அணியின் எந்தவொரு வீரருக்கு எதிராகவும் பொலிஸ் விசாரணை நடத்தப்படவில்லை என நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.