வறட்சியினால் பாதங்களில் உரியும் இறந்த தோல்களை நீக்குவது இப்படித்தான்

வறட்சியினால் பாதங்களில் உரியும் இறந்த தோல்களை நீக்குவது இப்படித்தான்

கற்றாழை

இரவில் படுக்கும் போது, கற்றாழை ஜெல்லை பாதங்களில் தடவி நன்கு உலர வைத்து, பின் கால்களில் சாக்ஸ்(socks) அணிந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கால்களைத் தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய்

தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை பாதங்களில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் கால்களுக்கு சாக்ஸ் அணிந்து வர, பாதங்களில் உள்ள வறட்சி தடுக்கப்பட்டு, பாதங்களும் மென்மையாக இருக்கும்.