இம்மாதம் பாராளுமன்றில் தகவலறியும் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் – ஊடகத்துறை அமைச்சர்

இம்மாதம் பாராளுமன்றில் தகவலறியும் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் – ஊடகத்துறை அமைச்சர்

தகவலறியும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இந்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தகவலறியும் சட்டமூலம் மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன்படி, சில மாகாண சபைகள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாகவும், ஏனைய மாகாண சபைகள் விரைவில் அதற்கான அங்கீகாரத்தை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மாகாண சபைகளினதும் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதன் பின்னர், குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.