உமா ஓயா திட்டத்தை மீள் ஆரம்பிக்க கவனம்

உமா ஓயா திட்டத்தை மீள் ஆரம்பிக்க கவனம்

உமா ஓயா திட்டத்தை மீள் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றாடல் பாதிப்புகளுக்கு வழியமைக்காத முறையின் கீழ், இந்தத் திட்டத்தை மீள் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டார்.

அத்துடன், இத்திட்டத்தினை முன்னெடுக்க ஈரானின் நிதியுதவி தேவைப்படும் அதேவேளை அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான சர்ச்சை காரணமாக இத்திட்டத்திற்கான நிதியுதவியை ஈரானிடமிருந்து பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.