காணாமல் போன ஊடகவியலாளர்கள் குறித்து மீண்டும் விசாரணை

காணாமல் போன ஊடகவியலாளர்கள் குறித்து மீண்டும் விசாரணை

ராஜபக்ச ஆட்சி காலத்தில் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆவணங்கள் திறக்கப்பட்டு விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக மறைக்கப்பட்டுள்ள பல விசாரணைகள் மீண்டும் வெளியில் வரும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது நலவாய சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஆரம்பிக்கப்படும் விசாரணைகள் உண்மையான, பாரபட்சமற்ற நியாயமான மற்றும் நேர்மையான வகையில் நடாத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன் என அறிவுரை வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.