கடும்போக்குவாத அமைப்புகளுக்கு பணம் வழங்கியது கடந்த அரசே – அரச புலனாய்வுப் பிரிவு

கடும்போக்குவாத அமைப்புகளுக்கு பணம் வழங்கியது கடந்த அரசே – அரச புலனாய்வுப் பிரிவு

கடந்த அரசாங்கம் கடும்போக்குவாத அமைப்பு ஒன்றுக்கு இரகசியமான முறையில் பணம் வழங்கியதாக, அரச புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

கடும்போக்குவாத செயற்பாடுகளுக்காக, பாதுகாப்பு தரப்பு இரகசிய கணக்கு ஒன்றின் ஊடாக பணம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவி வரும் கடும்போக்குவாத செயற்பாடுகள் மற்றும் தூண்டுதல்களின் அபாயம் குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கும் புலனாய்வுப் பிரிவிற்கும் இடையில் உயர் மட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கடந்த அரசாங்கம் கடும்போக்குவாத அமைப்பிற்கு பணம் வழங்கியமை குறித்த விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் கணக்கு பற்றி விசாரணை நடாத்த தடை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கடும்போக்குவாத அமைப்பு அளுத்கம பிரதேசத்தில் இரண்டு பேரை கொலை செய்து மேற்கொண்ட கலகம் தொடர்பிலான விசாரணை அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கடும்போக்குவாத அமைப்புக்களின் பின்னணியில் யார் செயற்படுகின்றார்கள் என்பது பற்றிய விபரங்களை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளதாகவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.