ஐ.தே.கவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு மார்ச் மாதத்திற்குள் பூர்த்தி

ஐ.தே.கவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு மார்ச் மாதத்திற்குள் பூர்த்தி

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு மார்ச் மாதத்திற்குள் பூர்த்தியாகும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வுகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏழு துணைக் கமிட்டிகள் அமைக்கப்பட்டு தற்போது மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மேலும், கடந்த உள்ளூராட்சி மன்றங்களில் பதவி வகித்த 1300 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்க கட்சி தீர்மானித்துள்ளது.

நெருக்கடியான நிலைமைகளின் போது கட்சியை பாதுகாத்து கட்சியில் நீடித்தமை, கீழ் மட்டத்தில் கட்சியை வலுப்படுத்தியமை உள்ளிட்ட காரணிகளை கருத்திற்கொண்டு முன்னாள் உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் கபிர் ஹாசீம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.