மின்சார சபையின் மனித வலு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது (UPDATE)

மின்சார சபையின் மனித வலு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது (UPDATE)

இலங்கை மின்சார சபையின் மனித வலு ஊழியர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

இன்று (17) நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமான இவர்களது ஆர்ப்பாட்டப் பேரணி கொள்ளுப்பிடியவிலுள்ள மின் சக்தி அமைச்சு வரை சென்றது.

அங்கு “அவரவர் தகுதிக்கு ஏற்ப சேவையில் இணைத்துக் கொள்ளவது தொடர்பில் ஆராய்வதாக, மின்சக்தி அமைச்சின் அதிகாரிகள் வாய் மொழி மூலம் வாக்குறுதி வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனயைடுத்து, ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை கைவிட்டு ஊழியர்கள் களைந்து சென்றதாக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவர்கள் முன்னெடுத்த ஆர்பாட்டம் காரணமாக கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தை பகுதியில் இருந்து கொள்ளுப்பிட்டி சந்தி வரை போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

கொள்ளுப்பிட்டி சந்தியருகில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு – கொள்ளுப்பிட்டி சந்தியில், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மின்சார சபையின் மனித வலு (CEB manpower) ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.