ஷரீஆ சட்ட அறிமுகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிபிஎஸ் ஜனாதிபதிக்கு மகஜர்

ஷரீஆ சட்ட அறிமுகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிபிஎஸ் ஜனாதிபதிக்கு மகஜர்

அர­சாங்கம் இஸ்­லா­மிய அபி­வி­ருத்தி வங்­கியின் உறுப்­பு­ரி­மையை பெற்றுக் கொள்­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்தும் இதன் மூலம் நாட்டில் ஷரீஆ சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்சிப்பதையும் எதிர்த்தும் பொது­ப­ல­சேனா அமைப்பு ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு மகஜர் ஒன்றை கைய­ளித்­துள்­ளது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை பொதுபலசேனாவின் நிறை­வேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதா­ன­கே­யினால் இந்த மகஜர் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட மக­ஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கை தற்­போது எதிர்­நோக்­கி­யுள்ள பொருளாதார நெருக்­கடி கார­ண­மாக ஒரு பில்லியன் அமெ­ரிக்க டொலரைப் பெற்றுக்கொள்ளவதற்கு இலங்­கையில் சமய ரீதி­யி­லான வங்கி முறை­யொன்­றினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக ­அறி­கிறோம். இஸ்லாமிய அபி­வி­ருத்தி வங்­கியின் அங்கத்துவத்தை பெற்றுக் கொள்­வ­தற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு­வ­தாகத் தெரிய வருகிறது.

இந்நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு இது­வரை ஆட்சி செய்த ஐ.தே.க. மற்றும் ஸ்ரீல.சு. கட்சி பொறுப்புக் கூற வேண்டும் என்­ப­துடன் நாட்டை தேவை­யற்ற பிரச்­சி­னை­க­ளுக்கும் ஆளாக்­கி­யுள்­ளன.

மத்­திய வங்­கியின் ஆளுநர் நாட்டில் இனங்களுக்கு இடையில் பிள­வு­களை ஏற்படுத்தும் வகை­யி­லான சமய ரீதி­யி­லான வங்கி முறை ஆரம்­பிக்­கப்­ப­ட­மாட்­டாது என ஏற்கனவே எமக்கு எழுத்து மூல­மான உறுதி வழங்­கி­யுள்ளார். இந்­நி­லையில் இலங்­கையில் இஸ்­லா­மிய வங்­கி­முறையை நிறுவ முயற்சிப்பதானது மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

ஆட்­சி­யா­ளர்­களின் திற­மை­யற்ற ஆட்­சி­யினால் முஸ்லிம் அல்­லாத நாடொன்றில் இவ்­வா­றான இஸ்­லா­மிய ஷரீஆ சட்­டத்தை அமுல்­ப­டுத்த இரகசியமாக முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. மக்களின் பணம் தொடர்பில் பொறுப்பு கூறவேண்டிய பாராளுமன்றமும் இது தொடர்பில் மௌனமாக இருப்பது மிகவும் ஆபத்தானதாகும் என்பதை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.