தாஜூடீன் கொலை விசாரணையால் கலங்கும் நாமல் ராஜபக்ஷ

தாஜூடீன் கொலை விசாரணையால் கலங்கும் நாமல் ராஜபக்ஷ

தாஜூடீன் கொலை சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளை ஊகங்களின் அடிப்படையில் நடத்த வேண்டாம் என தாம் கேட்டுக்கொள்வதாக நாடாளும்னற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணை முடிவுக்கு வரும் முன்னர், இந்த கொலையுடன் தனக்கு தொடர்பிருப்பதாக சில தரப்பினர் குற்றம் சுமத்துவதாகவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தான் அவதானித்து வருவதாகவும் நாமல் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தாஜூடீன் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய போவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் பொலிஸ் தலைமையகத்திற்கு உறுதிப்படுத்தி கூறவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஒரு நபரை கைது செய்யும் முன்னர், அந்த நபரை கைது செய்ய போவதாக பொலிஸார் கூறுவதில்லை. இவ்வாறு கைதுகள் எதிர்காலத்தில் நடக்கலாம் நடக்காமலும் இருக்கலாம் என ஊடகங்களிடம் கூறமுடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை தாஜூடீன் கொலை தொடர்பில் 4 செல்போன்கள் மூலம் பெறப்பட்ட விபரங்களுக்கு அமைய கொலை தொடர்பான முக்கியமான பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 4 தொலைபேசிகளும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்தியது எனவும் தெரியவந்துள்ளது.