கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை கோருகிறார் பைஸர் முஸ்தபா

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை கோருகிறார் பைஸர் முஸ்தபா

பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவினால் வெற்றிடமாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை தமக்கு வழங்குமாறு மாகாண, மாகாண நிர்வாக அமைச்சர் பைஸர் முஸ்தபா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஶ்ரீ.சு.கட்சி தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியவர்களில் பைசல் முஸ்தபாவும் ஒருவராவர்.

அதேவேளை, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவிக்கு, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு மத்தியில் தற்போது பெரும் போட்டி நிலைமை உருவாகியுள்ளது.

இவர்களில் சுசில் பிரேமஜயந்த, எஸ்.பீ.திஸாநாயக்க, டிலான் பெரேரா, மஹிந்த சமரசிங்க, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

குறித்த பதவிக்காக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அந்தப் பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்துவரும் நாட்களில் குறித்த பதவிக்கு யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானிப்பார் என கட்சி வட்டார செய்திகள் அறிவிக்கின்றன.