நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட சலுகைகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட சலுகைகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் தலைமையின் கீழ் இடம்பெற்ற குழு கூட்டத்தின் போதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வாடகை வீடுகளில் வசிக்கும் உறுப்பினர்களின் வீடு ஒன்றின் வாடகைக்கு 50,000 ரூபாய் வழங்கவும், அலுவலகங்களை நடாத்தி செல்வதற்காக 75,000 ரூபாயும் வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாராளுமன்ற கூட்டங்கள் இடம்பெறாத நாட்களில், இடம்பெறும் அமைச்சரவை கூட்டங்களில் கலந்து கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக கொடுப்பனவுகளும்,தொலைபேசிக்காக வழங்கப்படும் கட்டணங்களை அதிகரிக்கவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான அறிக்கையினை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினரும் குழு உறுப்பினருமான நிஹால் கலப்பதியும், ஸ்ரீயானி விஜேவிக்ரமவும் தெரிவித்துள்ளனர்.