நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – கையெழுத்து வேட்டை இன்று

நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – கையெழுத்து வேட்டை இன்று

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ள பொது எதிரணி, இதற்காக எம்.பிக்களிடம் கையொப்பம் திரட்டும் பணியை இன்று(23) முதல் ஆரம்பிக்கவுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்குமாறு பொது எதிரணியிலுள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மேற்படி விவகாரம் பற்றி விரிவாக ஆராயப்படவுள்ளது.

வருமான வரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுத்தியமை, நாளுக்கு நாள் நாணயத்தின் பெறுமதி குறைவடைதல், வெளிநாட்டுக் கையிருப்பில் நிலவும் வீழ்ச்சி, அதிக வட்டிக்கு கடன் பெறல் போன்ற காரணங்களை வைத்தே நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப் போவதாக பொது எதிரணி மேலும் கூறியுள்ளது.