உள்ளூராட்சி சபைகளின் முன்னால் எதிர்ப்பில் ஈடுபடவுள்ள கூட்டு எதிர்க் கட்சியினர்

உள்ளூராட்சி சபைகளின் முன்னால் எதிர்ப்பில் ஈடுபடவுள்ள கூட்டு எதிர்க் கட்சியினர்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (31) நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளின் முன்னாலும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தேர்தலை ஒத்திப்போட்டு வருவதற்கு எதிராக கையெழுத்து வேட்டையொன்றையும் முன்னெடுக்கவுள்ளோம் எனவும் டளஸ் அழகப்பெரும மேலும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைக்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முடிவடைவதற்குள் உள்ளூராட்சி சபைகளை கலைத்ததன் நோக்கம் என்ன? எனவும் டளஸ் அழகப்பெரும கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும், நல்லாட்சி எனும் முத்திரையைக் குத்திக் கொண்டு, உள்ளூராட்சி சபைக்கான தேர்தலை நடாத்தாது இவ்வாறு ஒத்திப்போட்டு வருவது ஜனநாயக விரோத செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.