ஆணுறுப்பை ஐபோன் மூலம் படம்பிடித்த தாதி நெருக்கடியில்

ஆணுறுப்பை ஐபோன் மூலம் படம்பிடித்த தாதி நெருக்கடியில்

27 வயதான கிறிஸ்டன் ஜோன்ஸன் எனும் இந்த யுவதி நியூயோர்க்கிலுள்ள அப்ஸ்டேட் பல்கலைக்கழக வைத்தியசாலையில் தாதியாக பணிபுரிந்தவர்.

மேற்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரின் ஆணுறுப்பை அந் நபருக்குத் தெரியாமல் அவர் தனது ஐபோன் தொலைபேசி மூலம் படம் பிடித்தாரெனக் குற்றம் சுமத்தப்பட்டார்.

அதையடுத்து, 9 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகளை அடுத்து கடந்த வருடம் மே மாதம் பொலிஸாரால் கிறிஸ்டன் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான நீதிமன்ற விசாரணைகளின் போது தன் மீதான குற்றச்சாட்டை கிறிஸ்டன் ஒப்புக்கொண்டார்.

அத்துடன் தனது மருத்துவ தாதி அனுமதி பத்திரத்தையும் அவர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இதனால் சிறைத்தண்டனையிலிருந்து கிறிஸ்டன் தப்பியுள்ள போதிலும் 3 வருட காலம் வரையான நன்னடத்தை கண்காணிப்புத் தண்டனையை அவர் எதிர்நோக்குகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.