நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் மதுபான விற்பனையாளர்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் மதுபான விற்பனையாளர்கள்!

1994ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் ஆயிரத்து 98 மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்களில் 45 பேர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முன்னணி அரசியல்வாதிகள். இவர்கள் தமது பெயர்களில் இந்த அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

45 அரசியல்வாதிகளின் 13 அரசியல்வாதிகள் குருணாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என தெரியவந்துள்ளது.

இதனை தவிர அதிகளவிலான அனுமதிப்பத்திரங்களை அரசியல்வாதிகள் வைத்திருப்பதாகவும் அவற்றை தமது உறவினர்களில் பெயர்களில் அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வைத்துள்ள அரசியல்வாதிகள் குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசியல்வாதிகளின் பெயர் விபரங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இருப்பதாக தெரியவந்துள்ளது.