T20 உலக்கிண்ண அரையிறுதியில் இந்தியா வெல்ல மேற்கிந்திய அணிக்கு “இலஞ்சம்”

T20 உலக்கிண்ண அரையிறுதியில் இந்தியா வெல்ல மேற்கிந்திய அணிக்கு “இலஞ்சம்”

இருபதுக்கு இருபது உலக்கிண்ண போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான அரையிறுதிப் போட்டியானது இன்று(31) இந்தியா – மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது.

போட்டி இவ்வாறிருக்க இந்திய கிரிக்கெட் சபையினால் மேற்கிந்திய தீவு அணிக்கு இந்நேரம் டெஸ்ட் போட்டிகள் நான்கில் விளையாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த போட்டிகள் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டிகள் மேற்கிந்தியத்தில் இடம்பெறவுள்ளதோடு, குறித்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய அணிகளுக்கு பாரியளவு பணமும் வழங்கப்படவுள்ளது.

2014ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிகள் இந்தியாவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டு விளையாடி சலசலப்புக்கு மத்தியில் இந்தியாவுடனான எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் மேற்கிந்திய அணிகள் பங்குகொள்ளாது இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அது எவ்வாறாயினும்;உலகக்கிண்ண போட்டிகளின் இறுதிக்கட்டத்தில் இவ்வாறு மேற்கிந்திய தீவுகள் அணியினை இந்திய டெஸ்ட் போட்டிக்கு அழைப்பது “இலஞ்சம்” என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிரிக்கெட்டில் பெயர் பதித்த நாடாக இந்தியா இருக்கின்ற அதேசமயம் கிரிக்கெட் இனை ஊழல் முறையில் வாங்கும் இந்தியா பற்றி அறிய இது நல்ல சந்தர்ப்பம் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.