மே’யில் IMF கடன் கிடைக்கும் சாத்தியம்

மே’யில் IMF கடன் கிடைக்கும் சாத்தியம்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) கடன் பெற்றுக்கொள்வது தொடர்பான இறுதிப் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் இடம்பெறவுள்ள நிலையில், எதிர்வரும் மே மாதத்தில் உரிய கடன்தொகை, இலங்கைக்கு கிடைக்கும் என பதில் நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இந்தக் கடனை, அந்நியச் செலாவணிக் கையிருப்புக்காகப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அதன் பின்னர் டொலரின் பெறுமதி வலுவானதாகிவிடும் எனவும் தெரிவித்த அமைச்சர், அந்நியச் செலாவணிக் கையிருப்புக்கு இந்தக் கடன்தொகை கிட்டிய பின்னர், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகள் போன்றனவும் இலங்கைக்கு கடனுதவிகளைச் செய்ய முன்வரும் எனவும் கூறினார்.

இலங்கைக்கு கடனைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற போதிலும், கடன் பெறுதல் மற்றும் அவற்றைத் செலுத்துதல் தொடர்பில் முறையான நிர்வாகமொன்று தற்போது இருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.