புதிய அரசு அமைக்கவுள்ள மஹிந்தவின் செயல் வேடிக்கையே – சம்பிக்க

புதிய அரசு அமைக்கவுள்ள மஹிந்தவின் செயல் வேடிக்கையே – சம்பிக்க

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கப் போவதாக கூறி வருகின்றமை வேடிக்கையாக உள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் 113 ஆசனங்கள் தேவைப்படுகின்ற நிலையில், வெறுமனே 43 ஆசனங்களை வைத்துக் கொண்டு மஹிந்தவால் எவ்வாறு ஆட்சியமைக்க முடியம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும், தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக மஹிந்தவின் ஊழல் நிறைந்த ஆதரவாளர்கள் செயற்பட்டு வருவதாகவும், இதற்கான சூழ்ச்சியை ஊடகங்கள் மற்றும் இணையங்கள் ஊடாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான வாய்ப்பை தாம் ஒருபோதும் வழங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறை பொது சந்தையினை திறந்து வைக்கும் வைபவத்தில் நேற்றைய தினம்(24) கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை அனைவருக்கும் தெரியும் வகையில் மேற்கொள்வதாகவும், எங்காவது ஊழல், இலஞ்சம் மற்றும் சொத்து குவிப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியவந்தால் உடனடியாக பொறுப்பானவர்களுக்கு அறிவிக்குமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இன்று எல்லோரும் கட்சி பேதங்களை மறந்து ஊழலுக்கு எதிராக ஒன்றுதிரண்டுள்ளதாகவும் தெரிவித்து அமைச்சர் சம்பிக்க குடும்ப ஆட்சியிலிருந்து விடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.