பசில் ராஜபக்ஷவிற்காக தயாசிறி அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவு

பசில் ராஜபக்ஷவிற்காக தயாசிறி அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவு

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அயல்நாடொன்றில் உதவியுடன், ஐக்கிய தேசியக் கட்சிக்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரிக்கும் சதி முயற்சியொன்றில் ஈடுபட்டுள்ளார் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தெரிவித்தார்.

கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள சு.க.வின் கட்சித் தலைமையகத்தில் இன்று(29) இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஜயசேகர, ‘மஹிந்த ராஜபக்ஷ மீது நாம் அன்பு கொண்டுள்ளோம். அதனாலேயே, பசில் ராஜபக்ஷவின் சதித் திட்டத்துக்குள் மூழ்கி ஏமாற்றமடைய வேண்டாம் என்று மஹிந்தவருக்கு கூறுகின்றோம். அவர், சு.க.வின் காலி மேதினக் கூட்டத்துக்கு வந்தால், நான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவேன்’ என்றார்.

‘இதேவேளை, காமினி திசாநாயக்கவின் காலத்திலும், ஐக்கிய தேசியக் கட்சியை அதிகாரத்துக்கு கொண்டுவர, பசில் ராஜபக்ஷ பாடுபட்டார். தற்போதும் அவர் அதனையே செய்கிறார். காசைக் கொடுத்து சு.க.வைப் பிரிக்கும் சதி முயற்சியில் பசில் ஈடுபட்டுள்ளார்’ என அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் கூறினார்.