வாஸ் குணவர்தனவின் மனைவிக்கு எதிரான பிணை மனு விசாரணை 18ம் திகதி

வாஸ் குணவர்தனவின் மனைவிக்கு எதிரான பிணை மனு விசாரணை 18ம் திகதி

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி சியாமலி குணவர்தனவின் பிணை மனு எதிர்வரும் 18ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

பிணை வழங்குமாறு கோரி வாஸ் குணவர்தனவின் மனைவியின் சட்டத்தரணிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுவை நேற்று(29) பரிசீலனை செய்த கொழும்பு பிரதான உயர்நீதிமன்ற நீதவான் மனிலால் வைத்தியதிலக்க, எதிர்வரும் 18ம் திகதி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை மறைத்து வைப்பதற்காக சூழ்ச்சி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

மொஹமட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த மனுவின் ஏனைய சந்தேக நபர்களாவர்.

சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தமை தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கின் அடிப்படையில் சியாமலி பிரியதர்சனி பெரேரா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.