கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி பசிலுக்கு..?

கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி பசிலுக்கு..?

கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மே தினத்தின் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை பசிலிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க சிங்கள ஊடகமொன்று செய்தி வெளிளியிட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும செயற்பட்டு வருகின்றார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் டலஸிடம் ஒப்படைக்கப்பட்டு, பசிலுக்கு நாடாளுமன்றிற்கு வெளியிலான பணிகள் ஒப்படைக்கப்படவுள்ளன.

கிருலப்பலனையில் நடைபெறவுள்ள கூட்டத்தின் பின்னர் இந்தப் பொறுப்பு பசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியில் பசில் ராஜபக்ச இணைத்துக் கொள்ளப்படுவதற்கு உள்ளேயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.