மாலிங்கவிற்கு தொடரும் போட்டித்தடைகள்  – IPL இனைத் தொடர்ந்து  மற்றுமோர் போட்டிக்கு தடை

மாலிங்கவிற்கு தொடரும் போட்டித்தடைகள் – IPL இனைத் தொடர்ந்து மற்றுமோர் போட்டிக்கு தடை

கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ஜெமைக்கா தலவாஸ் அணியினை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க உபாதைக்குள்ளாகி இருப்பதால் அவரது வெற்றிடத்தினை நிரப்ப தென்னாப்பிரிக்க வீரரும் முதன்மை வேகப்பந்து வீச்சாளருமான டேல் ஸ்டெயின் தெரிவாகியுள்ளார்.

கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளானது ஜூன் மாதம் 30ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 7திகதி வரையிலும் நடைபெறுவதோடு, டேல் ஸ்டெயின் குறித்த இப்போட்டிகளில் பங்கேற்பது இதுவே முதற் தடவையாகும்.

IPL போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடத்தடை விதிக்கப்பட்ட மாலிங்கவின் இடத்திற்கு மேற்கிந்திய அணி வீரர் ஜேரம் டைலர் தெரிவாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டெயின் இது குறித்து தெரிவிக்கையில்;

“கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்க கிடைத்தமை எனக்கு பெரிதும் கௌரமாக இருக்கின்றது. இன்னும் ஜெமைக்கா அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடுவது என்பது எனக்கு உண்மையிலேயே அளவிட முடியாதளவு மகிழ்ச்சியாக இருக்கின்றது.”

“உலகின் எல்லா பகுதியிலிருந்தும் திறமையான வீரர்கள் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடுகின்றனர். ஹஷீம் அம்லா,ஏ.பி.டிவில்லியர்ஸ், டூப்லெசி, டேவிட் மில்லர் மற்றும் மோனி மோகல் அதேபோன்று ஏனைய எனது நண்பர்கள் ஆகியோருடன் விளையாடுவது புதுவித அனுபவமே..” எனவும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)