பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டம்..

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டம்..

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு தேசிய பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் புதிய சட்டமொன்றை கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இந்நாட்டுக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதி ஜுவன் மென்டாசுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல், விசாரணை நடவடிக்கைகளின் போதுள்ள சட்ட திட்டங்கள் மற்றும் புலனாய்வு சேவை நடவடிக்கை என்பன தொடர்பான பிரதான மூன்று விடயங்களை உள்ளடக்கியதாக இந்த தேசிய பாதுகாப்புச் சட்டம் காணப்படும் எனவும் அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் மேலும்  குறிப்பிட்டுள்ளன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிடுமாறு ஐரோப்பிய சங்கமும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் இங்கு  குறிப்பிடத்தக்கது.