இந்தியாவிடமிருந்து இறக்குமதியாகும் கார்களின் விலைகள் குறையும் வாய்ப்பு

இந்தியாவிடமிருந்து இறக்குமதியாகும் கார்களின் விலைகள் குறையும் வாய்ப்பு

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் இறக்குமதி வரியை நிதியமைச்சு அண்மையில் மீளாய்வு செய்ததை அடுத்து இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை பாரிய அளவு அதிகரிக்கப்படவுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக கார்களின் விலை குறைவடையும் வாய்ப்புள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 800cc மற்றும் 1,000cc இயந்திர கொள்ளளவைக் கொண்ட வாகனங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் இவ் ரகத்தை சேர்ந்த வாகனங்களின் சந்தை விலையில் வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனேகமான கார்கள் 800cc மற்றும் 1,000cc இயந்திர கொள்ளளவைக் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் Maruti Wagon-R போன்ற கார்களின் இறக்குமதி வரி 1.5-1.6 மில்லியன் ரூபாவில் இருந்து 1.35 மில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.