அனுஷ பெல்பிட அதிரடியாய் பதவி நீக்கம்..?

அனுஷ பெல்பிட அதிரடியாய் பதவி நீக்கம்..?

உள்விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் பதவியில் இருந்து அனுஷ பெல்பிடவை நீக்கவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

அண்மையில் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட, உள்விவகார அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் முன்வைத்த எதிர்ப்பு காரணமாக இவரை அப் பதவியில் இருந்து நீக்கவுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அனுஷ பெல்பிட குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் எனவும், அவரை அரச பதவியில் அமர்த்துவது ஒழுங்கு விதிகளுக்கு முரணானது எனவும், அண்மையில் தொழிற் சங்கங்களின் ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிடப்பட்டது.

அரச சொத்துக்களை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அவருக்கு அரச தொழில் ஆணைக்குழுவால் இவ்வாறு பதவி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அச்சங்கம் பெரும் அதிருப்தியையும் வௌியிட்டது.

இந்தநிலையில் அனுஷ பெல்பிடவின் நியமனத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்க தொழில் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது குறித்த கடிதம் இன்று பிற்பகல் கிடைக்கப் பெரும் எனவும் நம்பத் தகுந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.