சீனாவின் EXIM வங்கியுடன் இலங்கை உடன்படிக்கைகள் கைச்சாத்து

சீனாவின் EXIM வங்கியுடன் இலங்கை உடன்படிக்கைகள் கைச்சாத்து

சீனாவின் EXIM வங்கியிடம் இருந்து 1.7 பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்கீழ் தெற்கு அதிவேக பாதையின் விஸ்தரிப்புக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

இதற்கான யோசனையை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

ஏற்கனவே இலங்கை அரசாங்கம் குறித்த சீன வங்கியுடன் நான்கு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது.

சீனாவுடன் உறவுகள் சீரற்றுப் போயிருந்தபோதும் இலங்கை அரசாங்கம் 2015ம் ஆண்டு குறித்த சீன வங்கியிடம் கடன்களுக்கான விண்ணப்பத்தை செய்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.