மருந்தாகும் திராட்சை

மருந்தாகும் திராட்சை

” சீ … சீ .. இந்தப் பழம் புளிக்கும் !’’ எனக் கூறிச்சென்ற நரியின் கதையைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அன்று திராட்சைக் கொடியிலுள்ள பழங்களைபறிக்க முடியாமல் நரி சென்றுவிட்டது. ஆனால் நாம் இங்கு கூறப்போவது நரியின் ஏமாற்றம் பற்றியல்ல. மாறாக சீ … சீ .. என நரி கூறிச்சென்ற திராட்சை பற்றியதாகும்.

ஆம், திராட்சையின் மருத்துவக் குணங்களாக…

திராட்சையில் குளுகோஸ்,சுக்ரோஸ் மற்றும் ஒர்கனிக் அமிலம் என்பன அடங்கியுள்ளன. இவை நமது இரைப்பையை சுத்தம் செய்யக் கூடியன என்பதுடன் மலச்சிக்கலை தீர்ப்பதற்கான உடனடி நிவாரணமாகவும் செயல்படுகின்றது.

இருதய நோயுள்ளவர்கள் தினமும் ஒருவேளை திராட்சை சாப்பிடுவது நன்மை பயக்கும்,என்கின்றனர் இயற்கை விஞ்ஞான மருத்துவர்கள்.

மேலும்; பல் ஈறுகள் பலமாவதுடன் கல்லீரலையும் பலப்படுத்தி அதன் தொழிற்பாட்டையும் சீராக்கும்.

எனவே, இனி நாமும் குண நலமிக்க திராட்சையை உண்ணப் பழகுவோம்.