கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஸீர் அஹ­மட்­டுக்கு எதி­ராக சட்­டத்­த­ரணி பி. லியன ஆராய்ச்சியினால்  கொழும்பு உயர்­நீ­தி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனு நேற்று விசா­ர­ணைக்­காக எடுத்துக் கொள்­ளப்­பட்டபோது தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி திரு­கோ­ண­மலை- சம்பூர் பாட­சா­லை­யொன்றில் இடம்­பெற்ற நிகழ்வின்போது   கடற்­படை அதி­காரி ஒரு­வரை தூற்­றி­ய­துடன் சீரு­டையில் இருந்த மாணவி ஒரு­வரை அசௌ­க­ரி­யத்­திற்கு உட்­ப­டுத்­தி­ய­தாக மனு­தாரர் குற்றம் சுமத்­தி­யி­ருந்தார்.

இதனால் அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தாக சட்­டத்­த­ரணி தனது மனுவில் குறிப்­பிட்­டி­ருந்­த­துடன், குறித்த மனுவில் முத­ல­மைச்சர் மற்றும் சட்­டமா அதிபர் ஆகியோர் பிர­தி­வா­தி­க­ளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

குறித்த சம்­பவம் தொடர்­பாக கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் பகி­ரங்க மன்­னிப்பு கோர வேண்டும் எனவும் நட்ட ஈட்டுத் தொகை­யொன்றை வழங்க வேண்டும் எனவும் மனு­தாரர் அந்த மனுவில் கேட்டிருந்தார்.

குறித்த வழக்கு உயர் நீதி­மன்­றத்தில் பிர­தம நீதி­ய­ரசர் கே. ஸ்ரீபவன், நீதி­ய­ர­சர்­க­ளான பிரி­யந்த  ஜயவர்தன மற்றும் பிர­சன்ன ஜய­வர்­தன ஆகியோர் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது  மனு­தா­ரரால் கூறப்­பட்ட கோரிக்­கை­யா­னது முகத்­தோற்ற அளவில் அடிப்படையற்ற கார­ணங்­களைக் கொண்டு இந்த வழக்கைத் தொடர முடி­யா­தெனக் கூறிய நீதிபதிகள்  வழக்கினை  தள்­ளு­படி செய்­தனர்.