ஜப்பான் வாகனங்களின் விலைகளில் மீண்டும் உயர்வு

ஜப்பான் வாகனங்களின் விலைகளில் மீண்டும் உயர்வு

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் யென்னின் பெறுமதி அதிகரிப்புடன் வாகனங்களின் விலைகளும் உயர்வடையும் என சங்கத்தின் தலைவர் மஹிந்த சரத்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ரூபாவுடன் ஒப்பிடும் போது ஜப்பான் யென்னின் பெறுமதி ஒன்று தசம் 45 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் 3 இலட்சம் ரூபாவில் இருந்து நான்கு இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

கார், ஜீப் மற்றும் வான்களின் விலைகள் அதிகரிக்கும் எனஇலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் மஹிந்த சரத்சந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.