இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் தலையிடக்கூடாது – ரஷ்யா

இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் தலையிடக்கூடாது – ரஷ்யா

இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் தலையீடு செய்யக் கூடாது என ரஸ்யா கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் ரஸ்யா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச நாடுகளின் தலையீடு அவசியமற்றது என தெரிவித்துள்ளது.

யுத்தம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் தலையீடு செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ரஸ்யா தெரிவித்துள்ளது.

புறச் சக்திகளின் தலையீடு இன்றி உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள இலங்கைக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.