பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விஷேட கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விஷேட கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலான கட்சித் தலைவர்களுடனான விஷேட கலந்துரையாடலானது எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ளது.

எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள, நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதம் பற்றி அரசாங்க கட்சிகள் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

இதேவேளை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறும் வரை பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு உதவி வழங்காதிருக்க சில கட்சிகள் தீர்மானித்துள்ளதாகவும் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்வுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று பாராளுமன்றத்தின் ஒழுக்குப் புத்தக்கத்தில் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.