கூட்டு எதிர்கட்சியினரின் உறுப்பினர்கள் 11 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை.

கூட்டு எதிர்கட்சியினரின் உறுப்பினர்கள் 11 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை.

கூட்டு எதிர்கட்சியினர் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை நிறைவு நாளான எதிர்வரும் 01ஆம் திகதி கூட்டு எதிர்கட்சியின் 11 முக்கிய உறுப்பினர்கள் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக புறக்கோட்டையில் கூட்டு எதிர்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது நீதிமன்ற உத்தரவை மீறி இடம்பெற்றுள்ளதாகவும், இதன் விசாரணைகளுக்காகவே குறித்த 11 பேரும் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஸ்குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, பந்துல குணவர்தன, நாமல் ராஜபக்ஸ , மஹிந்தாநந்த அளுத்கமகே , ஜோன்ஸ்டன் பெர்னானடோ, பிரசன்ன ரணதுங்க,ரோஹித அபேகுணவர்தன , ஸ்ரீயானி விஜயவிக்ரம , ரஞ்சித் சொய்சா ஆகிய உறுப்பினர்களே இவ்வாறு நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கூட்டு எதிர்கட்சியினரின் பாதயாத்திரையின் இறுதி நிகழ்வு முதலாம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த 11 உறுப்பினர்களுக்கும் அதில்பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.