பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக செல்கையில் அமைதியான பாதயாத்திரர்கள்..

பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக செல்கையில் அமைதியான பாதயாத்திரர்கள்..

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை, ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக செல்கையில், எவ்விதமான சத்தமும் இன்றி, கொடிகளை கீழே பணித்தவாறு கடந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதனைச் செய்தாலும், அவருடைய பெற்றோர்களான எஸ்.டப்ளியு. ஆர். டீ. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகிய இருவரும் நாட்டுக்கு செய்த சேவையை மறக்கமுடியாது.

ஆகையால்தான், அவர்களின் சமாதிக்கு கௌரவம் செலுத்தினோம் என்று பாதயாத்திரையின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 

ஹொரகொல்ல சமாதிக்கு பாதுகாப்பு வழங்குமாறு சந்திரிகா கோரிக்கை.

கூட்டு எதிரணியின் பாதயாத்திரை, இன்று ஹொரகொல்ல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கவுள்ளது. அதன்போது, பண்டாரநாயக்கவின் சமாதி அமைந்துள்ள பிரதேசத்துக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பாதயாத்திரையில் கலந்துக்கொள்ள வந்திருந்த ஏற்பாட்டாளர்கள் இருவர், குறித்த சமாதிக்கு சேதம் ஏற்படுத்த முனைந்ததையடுத்து, இந்த கோரிக்கையை விடுத்ததாக அவர் கூறியுள்ளார்.