உலகக்கோப்பை தகுதி சுற்றில் மெஸ்ஸி விளையாடுவதில் சந்தேகம்..

உலகக்கோப்பை தகுதி சுற்றில் மெஸ்ஸி விளையாடுவதில் சந்தேகம்..

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கெப்டனாக இருந்தவர் லயோனல் மெஸ்சி. சமீபத்தில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா – சிலி அணிகள் மோதின. இரு அணிகளும் போட்டி நேரம் முடியும்வரை கோல்கள் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி சூட் கடைபிடிக்கப்பட்டது.

இதில் மெஸ்சி தனது பெனால்டி வாய்ப்பை வீணடித்தார். இதனால் விரக்தியடைந்த மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது ஓய்வை அர்ஜென்டினா மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

மெஸ்சி தற்போது பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்லெடிக் பில்பாயோ அணிக்கெதிரான போட்டியில் பார்சிலோனா அணி 1-0 என வெற்றி பெற்றது. நியூசிலாந்து நேரப்படி இன்று நடைபெற இருக்கும் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரது இடது கால் தொடைப் பகுதியில் வலி ஏற்படுவதாக உணர்ந்தார். இதனால், அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அசோசியேசன்ஸ் ஆகிய இரண்டு மருத்துவ குழுவும் இந்த மருத்துவ அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது.

மெஸ்சி விரைவில் அர்ஜென்டினா புறப்பட இருக்கிறார். அங்கு அர்ஜென்டினா அணியுடன் இணையும் அவர், காயத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் களம் இறக்கப்படுவார்.

10 அணிகள் கொண்ட தென் அமெரிக்கா தகுதிச்சுற்றில் 6 போட்டிகள் முடிவில் 11 புள்ளிகளுடன் அர்ஜென்டினா 3-வது இடத்தில் உள்ளது. உருகுவே மற்றும் ஈக்குவேடார் அணிகள் 13 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றன.

அர்ஜென்டினாவில் வியாழக்கிழமை நடக்கும் போட்டியில் உருகுவே அணியையும், அதன்பின் ஐந்த நாட்கள் கழித்து வெனிசுலாவில் நடக்கும் போட்டியில் வெனிசுலாவையும் அர்ஜென்டினா எதிர்கொள்கிறது. மெஸ்சி இடம்பெறாததால் எட்கார்டோ பவுசா அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, அர்ஜென்டினா அணியின் செர்ஜியோ அக்யூரோ, சேவியர் பாஸ்டோர் ஆகியோர் காயம் காரணமாக தகுதிச் சுற்று ஆட்டத்தில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.