தடைசெய்யப்பட்ட கிளைபோசேட் கிருமி நாசினி திரவம் மீளவும் சந்தையில்..

தடைசெய்யப்பட்ட கிளைபோசேட் கிருமி நாசினி திரவம் மீளவும் சந்தையில்..

ரஜரட்ட உள்ளிட்ட உலர் வலயப் பகுதிகளில் பரவலாக பரவியுள்ள சிறுநீரக பிரச்சினைக்கு நேரடியாகத் தொடர்புபட்டுள்ள கிளைபோசேட் கிருமி நாசினி திரவம் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தடை விதிக்கப்பட்ட பின்னரும் தூள்களாக பக்கற்றில் அடைக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் ஹரியனா மாநிலத்தில் இருந்து இலங்கையின் வட பகுதிக்கு கடல் மார்க்கமாக இவை கொண்டு வரப்பட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்தியர் ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

எனவே தூள்களாக பக்கற்றுக்களில் அடைக்கப்பட்டு சந்தைகளில் இரகசியமாக விற்பனை செய்யப்படும் இவ்வாறான இரசாயனங்களை அரசு உடனடியாக தலையிட்டு தடைசெய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறில்லையாயின் பாரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஜயசுமன மேலும் குறிப்பிட்டுள்ளார்