வாய்விட்டு சிரிக்கலாம் வாங்க….

வாய்விட்டு சிரிக்கலாம் வாங்க….

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பது பழமொழி. இது நூற்றுக்கு நூறு சதவீத உண்மை என மருத்துவ ஆராய்ச்சிகள் பலவற்றினூடாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நமது நரம்புகள் ஒரு வித இரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு ‘CGRP’ (Calcitonin gene-related peptide) என்று பெயர்.
நரம்புகளுக்கு அடியிலுள்ள நோய் எதிர்ப்புச்சக்தி செல்களின் இயல்பை ஊக்குவிப்பதும் மட்டுப்படுத்துவதும் இது தான். நாம் மனம் விட்டு சிரிக்கும் போது ‘CGRP’ அதிகமாக சுரக்கின்றது. என்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகின்றது, என்பது 1993 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றிலிருந்து கண்டறியப்பட்டது.
இதேவேளை ஜப்பானின் கன்சாய் பல்கலைக்கழகத்தின் மனோதத்துவ பேராசிரியரான யோசி கிமுரோ தலைமையில் சிரிப்பினை அளவிட ஒரு டிஜிடல் கருவியை உருவாக்கி இருக்கின்றார்கள்.
அவர் கூறுகையில்; ‘’நாம் வாய் விட்டு சிரிக்கும் போது ஒருவகை மின் அதிர்வுகள் நம் உடல் முழுவதும் பரவுகின்றன. இவை,உடல் சுரப்பிகளின் செயல்பாட்டை தூண்டி விடுகின்றன. இதனால் இரத்த ஓட்டமும் சீராகின்றது. அத்துடன் இதயத்துக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட தசைப்பகுதி புத்துணர்ச்சி பெறுகின்றன’’ என்கின்றார்.
இந்த டிஜிடல் கருவியானது Laugh- o-meter என்று அழைக்கப்படுகின்றது.