கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி (Update)

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி (Update)

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(03) அனுமதி வழங்கியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷ இன்று நீதிமன்றில் முன்னிலையில்..

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று(03) நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய காரணத்திற்கா, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கோத்தபாயவை இன்றும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இம்மாதம் 7ம் திகதியில் இருந்து 21ம் திகதி வரை சீனாவில் நடைபெறவுள்ள பிராந்திய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு கோத்தபாய, தனது சட்டத்தரணிகள் ஊடாக கடந்த 30ம் திகதி கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கையை ஆராய்ந்து பார்ப்பதற்காக இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டி, கோத்தபாய ராஜபக்சவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அவன்கார்ட் வழக்கில் கோத்தபாயவுக்கு பிணை வழங்கப்பட்ட போதும், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.