போராட்டங்களால் நிதி நகர்த் திட்டம் கைவிடப்பட மாட்டாது.

போராட்டங்களால் நிதி நகர்த் திட்டம் கைவிடப்பட மாட்டாது.

ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் என எவ்வித தடைகள் ஏற்பட்டாலும் நிதி நகர்த் திட்டத்தை கைவிட முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிதி நகரத் திட்டத்தினால் மீனவர் சமூகத்திற்கு பொருளாதார பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்து நீர்கொழும்பு கொழும்பு பிரதான வீதியில் வீதிமறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் அபிவிருத்தித் திட்டத்தை கைவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்;

நிதி நகர்த் திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக மீனவர் சமூகம், சுற்றாடல், சட்டம், பொருளாதாரம் போன்ற துறைகளுக்கான பாதிப்பு குறித்து ஆராயப்பட்டு உச்ச நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மீனவர் சமூகம் பிரச்சினைகளை எதிர்நோக்கினால் மெகா பொலிஸ் அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நீதிமன்றம் மேலும் அறிவித்துள்ளது.

1.4 பில்லியன் டொலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் குறித்த இந்த திட்டத்தினால் எமக்கு பல்வேறு நலன்கள் கிடைக்கின்றன.

அபிவிருத்தித் திட்டத்தினால் மீனவர்களுக்கு ஏற்படக் கூடிய பொருளாதார நட்டத்தினை ஈடு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.